இருளில் உள்ள பழைய பால் பண்ணை பேருந்து நிலையம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

 பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்கு இன்றி இரவு நேரத்தில் பெண்கள் முதியவர்கள் அச்சத்துடன் நின்று கொண்டு உள்ளனர்இருளில் உள்ள பழைய பால் பண்ணை பேருந்து நிலையம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் தஞ்சை, திருவெறும்பூர், காட்டூர், துவாக்குடி, துப்பாக்கி தொழிற்சாலை, கல்லணை உள்ளிட்ட முக்கிய பகுதிக்குச் செல்லக்கூடிய பொதுமக்கள் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதியிலிருந்து வரும் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் காத்திருப்தற்க்கா கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்கு இன்றி இரவு நேரத்தில் பெண்கள் முதியவர்கள் அச்சத்துடன் நின்று கொண்டு உள்ளனர்.


மேலும் இங்கு இருட்டாக இருப்பதால் பேருந்து நிறுத்தும் பின்புறம் மது அருந்துவது, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள், மற்றும் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களால் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொதுமக்கள் துர்நாற்றாவாடையுடன் நிற்கின்றனர், எனவே இதை சுத்தம் செய்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


Post a Comment

Previous Post Next Post

Contact Form