முரசொலியில் வந்த கட்டுரை கேள்வியை திருப்பி கேட்கிறேன், நெய் கொண்டு உண்பவருக்கு வீட்டில் இருக்கும் எண்ணெயை பற்றி என்ன தெரியும் தேமுதிக வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் கேள்வி?
மின் கண்டன உயர்வை உயர்த்திய திமுக அரசை கண்டித்து தேமுதிக கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மின் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரி வர வழங்காததை கண்டித்தும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேமுதிக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் இராகவ் பிரகாஷ் கலந்து கொண்டுபத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதில்தொடர்ந்து திமுக அரசு மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வை உயர்த்தி உள்ளது இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரேஷன் கடைகளில் அரிசி பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் சரி வர வழங்கப்படுவதில்லை மேலும் கர்நாடகா அரசு நீர் திறந்து விடாமல் இருக்கிறது இதை வன்மையாக கண்டிக்கிறோம், நொய் கொண்டு உண்பவருக்கு வீட்டில் இருக்கும் எண்ணெயை பற்றி என்ன தெரியும் என்று நக்கலாக முரசொலியில் கட்டுரை எழுதினார் அதை பதிலை இப்போது கடனாக இதே பதிலை நான் சொல்கிறேன் ஏழை மக்களை பற்றி நீங்கள் சிந்திப்பது உண்டா?என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து திமுக அரசை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.