புதிய சட்டம்,எதிர்த்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்


திருச்சி,ஜுலை, 3:                                   மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர் மேலும் கடந்த ஜூலை 1 ந் தேதி முதல் 8ந் தேதி வரை மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்துள்ளனர். 


அதன் படி கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.


தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் (ஜாக்) பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சங்க செயலாளர் சுகுமார், துணை தலைவர் மதியழகன், இணை செயலாளர்கள் அப்துல் சலாம், சந்தோஷ் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், முத்துமாரி, ராஜலட்சுமி வினீஸ்குமார், சரவணன் மற்றும்  பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார்,


மூத்த வழக்கறிஞர்கள் வீரமணி, முத்துகிருஷ்ணன் மற்றும் குற்றவியல் வக்கீல்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர். இதனால் இன்று நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் வருகிற 8-ந் தேதி மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form