ஆழ்வார்தோப்பு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை கேட்டு ரயில்வே துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை:-
திருச்சி 29 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆழ்வார் தோப்பு பகுதியில் ரயில்வே துறை சார்பில் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து பாலக்கரை ரயில்வே ஸ்டேஷன் பகுதி வரை ரயில்வே தண்டவாளத்தின் இரு புறங்களிலும் ஐந்து அடிக்கு தடுப்பு இரும்பு வேலி அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
ரயில்வே துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆழ்வார்தோப்பு, காஜா தோப்பு காய்தே மில்லத் நகர், ஹிதையத் நகர் ஜாகிர் உசேன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் அதிலும் இப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் தண்டவாளத்தை கடந்து பாலக்கரை மரக்கடை எடத்தெரு ஆகிய பகுதிகள் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த வழியாகதான் சென்று வருகின்றனர்,
மேலும் வயதானவர்கள் ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் தண்டவாளத்தின் இருபுறங்களில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று வருவதற்கு தற்போது இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் ஆழ்வார் தோப்பு பகுதியில் ஓ பாலம் என்கிற சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் தற்போது இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் உள்ளிட்டவை சென்று வருகிறது இதனால் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அந்த சுரங்கப் பாதையில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர் மேலும் மழைக்காலங்களில் சிறிய மழைக்கே இந்த பாலத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஆழ்வார்தோப்பு பகுதியில் இருந்து பாலக்கரை பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் அடக்கம் செய்வதற்காக தூக்கிக்கொண்டு சென்றால் மாற்றுப்பாதையாக இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள பீமநகர் மேம்பாலத்தை கடந்தும், அல்லது தென்னூர் மேம்பாலத்தின் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் தேவைகளுக்காக இந்த தாண்டவாலத்தை கடந்து மருத்துவமனை பள்ளிகள், கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக இந்த ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு உதவிடும் வகையில் பாதை அமைத்து தரக்கோரி ரயில்வே துறை அதிகாரிகளிடம், தெரிவிக்க உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.