ஆட்டோ ஓட்டுனர் மகள் மருத்துவ உதவிக்கு உதவி செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்.
திருச்சி மாவட்ட அண்ணா மீட்டர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக ரத்ததானம், விபத்து உதவி, போன்ற பல்வேறு சமூகப் பணிகள் செய்து வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காதர் பாட்ஷா மகள் மருத்துவ செலவிற்காக நிதி அளித்து வருவதோடு சங்க நிர்வாகிகள் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி மேலும் ஆட்டோ ஓட்டுனர்களிடம் அவர்களின் மகள் மருத்துவ செலவிற்கு உதவி செய்து நிதி உதவி அளிக்குமாறும் தெரிவித்தனர்,
2000 ஓட்டுனர்களைக் கொண்டு திருச்சி மாநகர் மாவட்டம் முழுவதும் கார்ப்பரேட்டுக்கு இணையாக மீட்டர் கட்டண வாடகையில் பொதுமக்களிடம் நற்பெயர் பெற்று வரும் வாடிக்கையாளர்கள் தவறவிடும் பொருட்களையும் கொண்டு சேர்த்து மருத்துவமனைகள் பள்ளிகள் மற்றும் விபத்து போன்ற சவாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வருவதோடு ஓட்டுனர்களையும் ஒற்றுமையோடு பயணிக்க வைத்து திருச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இயங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தலைவராக இப்ராஹீம் அலி ஜெமினி பாவா , செயலாளர் முகமது ஷெரிப் , பொருளாளர் மாலிக் , துணைத் தலைவர் ஆசிர்வாதம் , துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ தங்கராசு உள்ளிட்டவர்கள் இதுபோன்று சமூக பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.