மதிமுக வேட்பாளர் துரை வைகோ அமோக வெற்றி
திருச்சி, ஜூன், 4: திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தலில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ,3 லட்சத்து 13ஆயிரத்து 094வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
மொத்தம், 25 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம், 5,42,213 வாக்குகளை துரை வைகோ பெற்றார்.
அதிமுக வேட்பாளர் கருப்பையா 2. 29,119 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்
நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ் 1,07,458 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் செந்தில்நாதன் 1,00.747 வாக்குகள் பெற்று நான்காம் இடம் இதனை தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமாரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்..