யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு,அமைச்சர் கே.என். நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் முஷிரா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து கே என் நேரு பேசுகையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவும்,சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்கக்கூடிய அரசாக செயல்படக் கூடிய அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு தவ்ஹீத் ஜமாத் அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பாக இருக்கக்கூடியதுபல நற்பணிகளை செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தான் இன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது அவர்கள் பணிகள் சிறக்க என்றென்றும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பெண்கள் உட்பட கிளை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.






