சாலையில் உள்ள செடி கொடிகளை அகற்றி சாலையை பராமரிக்க வேண்டுகோள்
திருச்சி, மார்ச், 5: திருச்சி அல்லூர் அஞ்சல் மேலத்தெரு பகுதி சமூக ஆர்வலர் திருவேங்கடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்,
அந்த மனுவில் திருச்சி நவல்பட்டு ஐடி பார்க் திருச்சிக்கு கிடைத்த பொக்கிஷம்
திருச்சி நவல்பட்டுவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை வளர்ச்சியை அடைய செய்ய வேண்டும்
ஐ.டி. பார்க் சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லை 100 அடி ஐ.டி.பார்க் ரோடு சாலையில் நடு பகுதில் செடிகொடிகள் வளர்ந்து உள்ளதால் ஆடு மாடுகள். செடிகொடிகளை தின்பதற்கு வருகிறது,
இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்ப்பட வாய்பு உள்ளதால் சாலை நடுவே உள்ள செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்து அழகு படுத்திட வேண்டும்
புதிய ஐ.டி பார்க் 2800 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு என்ற செய்தி தமிழக முதல்வர் அவர்களால் கிடைக்கப் பெற்றது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
மேலும் ஏற்கனவே பல நிறுவனங்கள் இருக்கின்றன ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்
ஐ டி.பார்க் என்னும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா இங்கு ஆயிரம் கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர் ஏராளமான நிறுவனங்கள் வர இருக்கின்றன
உடனடியாக 100 அடி ரோட்டில் போதிய மின் விளக்குகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் அந்த சாலை தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு ஐடி செல்லும் சாலை என்பதால் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பாக செல்ல பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.