150 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம் இதுவரை பட்டா வழங்கவில்லை, ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்யிடம் புகார்
திருச்சி.மார்ச்.4: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் 1வார்டுக்கு உட்பட்ட ஊர் பொதுமக்கள்,அப்பகுதி சமூக ஆர்வலர் குமார் தலைமையில் மற்றும் கெளதம் கார்திக். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் 1வது வார்டு பகுதியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா சிட்டா இது வரை வழங்கவில்லை.
நாங்கள் வசிக்கும் பகுதி பிரைவேட் தோப்பு சர்க்கார் மனை என்று இருப்பதாக கூறி .இதுவரை பட்டா சிட்டா வழங்காமல் கால தாமதம் தாழ்த்தி வருகின்றனர்,
இதனால் நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை,
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்துள்ளோம்,
மேலும் நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு தண்ணீர் மின்சாரம் வீட்டு வரி அனைத்தும் செலுத்தி வரும் நிலையில் எங்களுக்கு பட்டா இல்லை என்பது மிகவும் மன வேதனையாக உள்ளது எனவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்யிடம் முறையிட்டு, பிரைவேட் தோப்பு - சர்க்கார் மனை என்பதை மாற்றி, நகர நத்தம் நிலவரித் திட்டம் மற்றும் இரயத்து வாரியாக மாற்றி
ஜி ஓ வெளியிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளோம், என்றனர்