பாஜகசார்பில்மருத்துவ முகாம்

 பாஜக சார்பில் திருவெறும்பூர் பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் - டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தொடங்கி வைத்தார்!


திருச்சி, மார்ச், 3:                                    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சி மக்களவை  தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் அண்ணா வளைவு பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி மக்களவை தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்  தலைமையேற்று தொடங்கி வைத்தார்.


12 மருத்துவர்கள் 3 செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியுடன் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு 


மருந்து மாத்திரைகள் டானிக் வகைகள் மற்றும் பிசியோதெரபி கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன. உள்நோயாளியாக மருத்துவமணையில் தங்கி அவசரசிகிச்சை பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்த பயனாளிகள் 8 பேரை கண்டறிந்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தனது சொந்த செலவில் அவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தார். பாரதிய ஜனதா கட்சியின் புதுமையான இந்த அணுகுமுறையை அப்பகுதி மக்கள் மிகவும் வெகுவாக வரவேற்று பாராட்டினர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form