அரசு பள்ளியில் சேர்ப்போம்

 அரசுப் பள்ளியில் சேர்ப்போம் அனைத்து சலுகைகளையும் பெறுவோம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி,


திருச்சி, மார்ச், 1:                                    திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டின் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் 35. வார்டு சுரேஷ்,வட்டார கல்வி அலுவலர்கள் ரெஜி பெஞ்சமின், ஜெஹ்ரா பர்வீன்,வட்டார வளமை மேற்பார்வையாளர் ஜீலியானா,ஆசிரியை பயிற்றுனர் மகேசு ஆகியோர் கலந்து கொண்டனர்


இந்த பேரணியில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்,கல்வி கற்கும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர்.கல்வி கற்றால் சமத்துவத்தை பெறுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு பதவிகளை ஏந்தி சென்றனர்,


மேலும் ஒவ்வொரு பெற்றோரிடத்திலும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு வலியுறுத்தி துண்டு பிரசுரம் கொடுத்தனர்.

 


இந்த விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து இன்று 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, உறுப்பினர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form