ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியியல் துறை சார்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கம்
திருச்சி, பிப்,24: ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) உயிர்வேதியியல் துறை சார்பில், 22 மற்றும் 23 பிப்ரவரி 2024 ஆகிய தேதிகளில் "விலங்கு பரிசோதனை மற்றும் தாவரவேதியியல் நுட்பங்களில் பயிற்சி" (TAEPT-2024) என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது. செயலாளர் மற்றும் தாளாளர் . சி.ஏ., வெங்கடேஷ் ஆர். மற்றும் முதல்வர் முனைவர் எம்.பிச்சைமணி ஆகியோர் தலைமை வகித்து, பயிலரங்கை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சீனியர் துணைமுதல்வர் முனைவர் .ஜோதி, துணைமுதல்வர்கள் முனைவர் உபேந்திரன், முனைவர் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் தமிழகத்தின் பல்வேறு முன்னிலை கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பட்டறை முக்கியமாக பல்வேறு தாவர மூலக்கூறுகளை குரோமடோகிராஃபிக் நுட்பங்கள் மூலம் பிரித்தெடுத்தல், சோதனை விலங்குகளைக் கையாள்வது மற்றும் முன் மருத்துவ ஆய்வுகளுக்கு அவற்றை திறம்பட உட்படுத்துவதில் உள்ள நுட்பங்கள் குறித்த பயிற்சியையும் வழங்கியது. இந்தபயிலரங்கம் பங்கேற்பாளர்களின் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தவும், மருந்து வளர்ச்சிக்காக நடத்தப்படும் ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்தவும் உதவும். முன்னதாக உயிர்வேதியியல் துறைத்தலைவர் மற்றும் உயிர்அறிவியல் டீன் முனைவர் ஸ்ரீதரன் வரவேற்புரை வழங்கினார்.

