ஆர்.ஜி.ஆனந்த் சூறாவளி சுற்றுப்பயண

 உறையூர் பூரண மண்டலம் ஆகிறது - பாஜக திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர்  ஆர்.ஜி.ஆனந்த் சூறாவளி சுற்றுப்பயணம் 


திருச்சி, பிப்,24:                                        பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று


திருச்சி உறையூர் மண்டல் பகுதியில் "ஆர்.ஜி.ஆனந்த் உடன் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்ற தலைப்பில் 17 சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், 6 வார்டு தலைவர்கள், 16 பயனாளிகள் ஆகியோரை அவர்களது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து, அவர்களது கட்சி பணியை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்து,  ஊக்கப்படுத்தி ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசித்து, அவர்களின் பகுதிகளில் அதிகப்படியான சுவர் ஓவியம் வரைய ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உறையூர் மண்டல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form