75 வது குடியரசு தின விழா கிறிஸ்துராஜ் கல்லூரி சார்பில் கொண்டாப்பட்டது
திருச்சி, ஜன, 31: இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் அரசு அலுவலகங்கள்,கல்லூரி பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில்திருச்சி பஞ்சப்பூரில் உள்ள கிறிஸ்துராஜ் கல்லூரியில் நடைபெற்ற 75ஆம் ஆண்டு குடியரசு தின விழா மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.பாலகுமார். வரவேற்புரை வழங்கினார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் கல்லூரியில் வணிகவியல் முதுகலைப் பட்டம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் நந்தகுமார் சிறந்த கபடி வீரர் , திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்பாக விளையாடும் மாணவர் ,தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அனைத்து துறை தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக இந்திரா லக்ஸ் மாலினி, வணிகவியல் துறை தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நன்றிகூறினார்
