காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சட்ட துறை அமைச்சர் கலந்து கொண்டார்
திருச்சி, ஜன, 31: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குனர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பயிற்சி முடித்த 140 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பும் சிறை காவலர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது,
அணிவகுப்பு மரியாதை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டு. அனைவரையும் பாராட்டினர்,
விழாவில் சிறைதுறை காவல் அதிகாரிகள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்