காவல் அலுவலர்கள், ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு நிகழ்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி, ஜன 31திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருண்குமார், முயற்சியில் 28.01.2024-ம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் பணி புரியும் காவல் அலுவலர்கள், ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக வீடார்ட் - மேலாண்மை, மென்பொருட்கள் மற்றும் சேவைகள் நிறுவனத்தின் மூலம்
இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சி வீடார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி.இ.ஒ. சித் அஹமத், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், முன்னிலையில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திரு. மனோகர்,துவங்கி வைத்தார்,
இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் 282 காவல்துறை ஆளினர்களின் குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் காவல்துறை ஆளினர்கள் 150 பேர் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சியினை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பித்து உரையாற்றும் போது இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், வேலை வாய்ப்பு அனைவருக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்நிகழ்ச்சிக்கு "நம்பிக்கை" என பெயர் சூட்டி வந்திருந்த காவலர்களின் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அந்நிறுவனத்தின் கீ ஆர் கோடு மூலம் ஒவ்வொருவரும் தங்களது படிப்பு விபரத்தினை இணைய வழி மூலம் அனுப்பியுள்ளனர். இதனை அந்நிறுவனத்தினர் பரிசிலனை செய்து தகுதியான நபர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்நிறுவனத்தினர், வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நிறுவனத்தின் சார்பாக, தங்களது நிறுவனங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு, நிறுவன சுற்றுப்பயணம் நிறுவணத்தினர் அனுப்புவதற்கும், வேறு நிறுவனங்களில் பணிபுரிய பரிந்துரை செய்வதற்கும், தூரமான பகுதிகளுக்கு சென்று பணிபுரியாமல், அவர்கள் இருக்கும் பகுதிகளிளையே பணிபுரியும் வகையில் வாய்ப்பை ஏற்படுத்தி தர உள்ளனர். மேலும் இதே போன்று மற்ற நிறுவனங்களும், காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு நிகழ்வினை நடத்த வாய்ப்பினை ஏற்படுத்தி தர திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறையினர் தயாராக உள்ளனர்.
குறிப்பாக, இந்நிறுவனத்தினர், காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குடும்ப பெண்கள், திருமணமாகியும், குழந்தை பேறு காரணத்தினாலும், குடும்ப சுழ்நிலை காரணமத்தினாலும், நீண்ட இடைவெளி ஏற்பட்ட காரணத்தினால், அவர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டு, அவர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க, இந்நிறுவனம் முன்வந்துள்ளது. என்பது குறிப்பிடதக்கது.