கவிதை புத்தகங்கள் எழுதி பரிசு பெற்ற சிறை மேலாளர்
திருச்சி, ஜன, 28: திருச்சி மத்திய சிறை மேலாளர் அ. திருமுருகன் என்பவர் தூய காற்றே மற்றும் என் உயிரே ஆகிய இரண்டு கவிதை புத்தகங்களை எழுதி அதில் இவர் உயிர் எழுத்துக்களை முதலெழுத்துக்களாக வைத்து தன் தாயின் அன்பை பற்றி எழுதிய என்னுயிரே என்ற கவிதை நூலை 27 .12. 2023 அன்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் வெளியிட்டார் . கவிதை நூல் இந்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இச்சாதனையை பாராட்டி திரைப்பட இயக்குனர் கே பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் சான்று மற்றும் பதக்கத்தை வழங்கினார்கள் .