பாதாள சாக்கடை பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
திருச்சி, ஜன, 13: திருச்சி உக்கடை அரியமங்கலம் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோன்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் வடக்கு உக்கடை சர்வீஸ் சாலையில் பாதாள சாக்கடை மெயின் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக மணல் அள்ளுவதற்கு டிப்பர் லாரி வந்துள்ளது. அந்த லாரியில் மணல் அள்ளி செல்லும் போது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயங்கள்யின்றி உயிர் தப்பினார்.
இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.