கீரனூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஊழியர்கள் கும்மியடித்து கொண்டாடினர்
திருச்சி, ஜன, 13: தமிழக முழுவதும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பொங்கல் பண்டிகை வருட வருடம்தை மாதம் ஒன்றாம் தேதி தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர் இன்னும் பொங்கல் பண்டிகைக்குஇரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பொங்கல் பண்டிகையைவெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுக்கா அலுவலகத்தில் குளத்தூர் தாசில்தார் காமராஜ் தலைமையில் மண்பானை வைத்து பச்சரிசி வெல்லம் ஏலக்காய் முந்திரி திராட்சை போட்டு பொங்கல் வைத்து பொங்கி வரும் போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டனர்இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர் அலுவலர்கள்ஊழியர்கள் பொங்கல்விழா கொண்டாடினர்விளையாட்டு விழாவாக உறி அடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது ஊழியர்கள் கும்மியடித்து கொண்டாடினர்

