விருது பெற்ற மாற்றுத்திறனாளிகள்

 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக தொண்டாற்றிய சமூக ஆர்வலர்களை பாராட்டிய தன்னார்வ சேவை சங்கத்தினர்!


திருச்சி, டிச,4:                                        சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலையரங்க மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் தினம் நடைபெற்றது. விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் சமூக நல அலுவலர் நித்யா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்

 தன்னார்வ மாற்று திறனாளிகள் சங்க நிறுவனத் தலைவர் சிவப்பிரகாசம், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் தீபலட்சுமி உட்பட பலர் பாராட்டு சான்றிதழை பெற்றனர்.

தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்பாக தொண்டாற்றிய தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க நிறுவனத் தலைவர் சிவபிரகாசம் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் தீபலட்சுமி உள்ளிட்டோருக்கு திருச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் தென்னக நுகர்வோர் மக்கள் உரிமை பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் மனித விடியல் மோகன், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பால் குணா லோகநாத், அன்னதானம் முதல் அனாதை பிணங்கள் வரை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ஆருத்ரா சாரிட்டபிள் டிரஸ்ட் பாஸ்கரன், சாலை பயனீட்டாளர் அறக்கட்டளை ஐயாரப்பன், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு காமகோடி சுந்தர், தீபா ஷைனி உட்பட பலர் பொன்னாடை அணிவித்து மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த

தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க நிறுவனத் தலைவர் சிவபிரகாசம் திருச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளி உரிமை பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் தீபலட்சுமி உள்ளிட்டோரை பாராட்டினார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form