மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு நாள் திருச்சி புறநகர் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
திருச்சி, டிச.5: கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், கழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடியார் ஆணைப்படி
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அ.இ.அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெ ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அதிமுககழக நிர்வாகிகள் தொண்டர்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வழக்கறிஞர் மு பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் சோமரசம்பேட்டை, குழுமணி,ஜீயபுரம்,பெட்டவாய்த்தலை, முசிறிகைக்காட்டி,துறையூர்,மண்ணச்சநல்லூர்,ஆகிய புறநகர் பகுதிகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வழக்கறிஞர் மு பரஞ்ஜோதி, தலைமையில் அண்ணா தொழிற்சங்க மாநிலத் தலைவர்,தாடி மா, ராசு, கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஆகியோர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்,
இதில்,மாநிலஇளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ்,
மாவட்ட பொருளாளர் சேவியர், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன், மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவிச்சந்திரன், பாக்யராஜ் மற்றும் அருண், நவநீதன், வக்கீல் தர்மு, ராஜா, மணிவேல், அல்லித்துறை ராஜேந்திரன்,புங்கனூர் கார்த்தி நவனி. பொன் முருகன் .தர்மா தேவா. மகாமுனி. வைரவேல்.உடன். சமயபுரம் ராமு. ஸ்ரீரங்கம் நடேசன். ஜெயம் ஸ்ரீதர். சுந்தரமூர்த்தி. முசிறி. மைக்கேல் ராஜ். சமயபுரம் தினேஷ். எட்டரை அன்பரசு. ஆமூர் சுரேஷ் ராஜா உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர், பூத் கமிட்டி பொருப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்