திருச்சி, டிச, 16: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மணல் கொள்ளையை தடுத்திட சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் சாமானிய மக்கள் நல கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலு தலைமை தாங்கினார், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் காசிம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிரிஜா, வடக்கு மாவட்ட செயலாளர் மலர்மன்னன், ஆகியோர் முன்னிலையில் ஏர்போர்ட் பகுதி செயலாளர் அக்கீம்,முஸ்தபா, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் கணபதி, டானி வேல், கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் செந்தில், லால்குடி பொறுப்பாளர் காமராஜ் ,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செந்தில், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜா மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தென்னரசு கண்டன உரையாற்றினார்கள் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரக்குடி பட்டியில் புது ஊரணி குளத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதை தட்டிக் கேட்கும் சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகிறார்கள் இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை ஆகையால் சட்ட விரோதமாக மணல் திருடுவார்கள் மீது வடிகால் ஆக்கிரமப்போர் மீதும் குண்டாஸ் வழக்கு பதிவு செய்தால் மட்டுமே ஆக்கிரமிப்பு மணல் கொள்ளை. தடுக்க முடியும், இதை கண்டு கொல்லாதே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது