அறநிலைத்துறை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு.


திருச்சி, டிச.15ஸ்ரீரங்கத்தில் கோயில் வளாகத்தில் ஐயப்ப பக்தர்களை தாக்கிய 3 ஊழியர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகர் தலைமையில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் முன்பு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.


மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் கோவில் இணை ஆணையரிடம் மனு கொடுத்து விட்டு சாமி தரிசனம் செய்யப் போவதாக தெரிவித்தனர். 

ஆனால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்க வில்லை. மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களிடம் காவல் ஆய்வாளர் அரங்கநாதன் பேச்சுவார்த்தை நடத்தினர் .  

பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீரங்கம் கோவிலில் தற்போது ஏகாதசி விழா நடைபெறுவதால் போராட்டத்தை கைவிடும் படி போலீசார் கூறியதை தொடர்ந்து 


கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகர்,  மாநில துணைத் தலைவர் மாரி, மாவட்டத் தலைவர் அழகர், மாநில துணைச் செயலாளர் சிவபாலமூர்த்தி இளைஞர் அணி மாநில தலைவர் பிரசாந்த் , சக்தி சேனா நிறுவனத் தலைவர் அன்பு மணி, ஸ்ரீராம் சேனா நிறுவனத் தலைவர் நாகராஜ், அர்ஜுன் சேனா நிறுவனத் தலைவர் டவர் செல்வம், , இந்து சேனா மாநில பொதுச் செயலாளர் மணிவேல் உள்பட பலர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form