திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி, டிச, 13: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்க வட்டம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்,
அந்த மனுவில் இப்பகுதியில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும் தன் இருக்கும் இடத்திற்கு பட்டா வசதி குடிநீர் வசதி கேட்டு மனு ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதற்கு தீர்வு கிடைக்கப் பெற்றது,
இருப்பினும் தற்பொழுது மின் இணைப்பு பெறுவதற்கு தூன் கம்பம் ஊன்றும் போது அங்குள்ள பஞ்சாயத்து போர்டு துணைத் தலைவர் இது பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் இங்கு குழி தோன்றக்கூடாது,என்றும் தன்னை தவறான வார்த்தைகளை பேசி அவமானப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது மேலும் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு
சொந்தமான இடத்திற்கு வெளியில் தான் கம்பம் வைக்க உள்ள நிலையில் என்னை அவமானமாக பேசி மின் இணைப்பு பெறுவதற்கு தடையாக உள்ளார் என்று புகார் மனு அளித்துள்ளார்,
