தூய காற்றே என்ற கவிதை தொகுப்புக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது
திருச்சி, டிச.12: திருச்சி மத்திய சிறை மேலாளர் திருமுருகன் எழுதிய தூய காற்றே என்ற கவிதை தொகுப்பு நூல் அனைவராலும் வரவேற்கப்பற்ற நிலையில் பி ஃபிட் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் பாக்கியராஜ் பாராட்டி பரிசு அளித்தார். கவிஞர் திருமுருகன் பேசுகையில் அனைவரும் மரக்கன்றுகளை நடுமாறும் தூய காற்று வீச வழிவகை செய்யுமாறும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருச்சி பெண்கள் தனி சிறை கண்காணிப்பாளர் ருக்குமணி, பிரியதர்ஷினி, மற்றும் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பி ஃபிட் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்தனர். இதில் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
