டிசம்பர் 10 மனித உரிமை தினம் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
ஈரோடு, டிச, 10: டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் மனித உரிமை விழிப்புணர்வு கருத்தரங்கு,புதிய பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட முப்பெரும் விழா ஈரோடு மாவட்டச் செயலாளர் மார்க்கெட் சஞ்சய்,தலைமையில் ஈரோடு.வ.உ.சி. பார்க் மார்கெட் பகுதியில் நடைபெற்றது.
இதில் மாநில இயக்குனர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார் மாநில இணைச்செயலாளர் பழனிவேல், ஈரோடு மாநகர மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணகுமாரி, நாமக்கல் மாவட்ட இணை செயலாளர் சிவசந்திரன், ரஃபிக் என்கிற ராஜேந்திரன், ராசிபுரம் நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வழக்கறிஞர் இளங்கோ கலந்து கொண்டு மனித உரிமை விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்து மனித உரிமைகள் என்னென்ன என்பதை விளக்கி கூறினார்,
மேலும் புதிய பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியும் மரக்கன்றுகள் நட்டு வைத்தும் விழா பேருரை ஆற்றினார்,
இந்த விழாவில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,