சென்னை மிக்ஜம் புயல் நிவாரணத்திற்கு முதல்-அமைச்சர் கேட்ட ரூ.5,060 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் கோரிக்கை
திருச்சி, டிச.17; முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகமாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:- கடந்த 3, 4-ந் தேதிகளில் சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக வீடுகளில் மழைநீர் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி பார்வையிட்டு மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட் டார். இதில் அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் களத்தில் இறங்கி பணி செய்தது பாராட்டுக்குரியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்து உணவு, உடைகள், குடிநீர் வழங்கி மக்களின் துயர் துடைத்த தமிழக அரசின் செயல்கள் பாராட்டுக்குரியது. மேலும் இந்த மிக்ஜம் புயல் பாதிப்பை முழுமையாக சரிசெய்திட தமிழக முதல்-அமைச்சர், மத்திய அரசிடம் ரூ.5,060 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை ஏற்று ரூ.450 கோடி வழங்கியது. மீதம் உள்ள ரூ.4,610 கோடியை உடனடியாக வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
