புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது,
திருச்சி, டிச, 18: டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் விழா உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இயேசு பிறப்பு தினத்தை
கொண்டாடி வருகின்றனர்,
அந்த வகையில் திருச்சி சங்கிலியாண்ட புரம் பகுதியில் உள்ள இருதய சாமி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை தாமஸ்,மத்திய சபைத் தலைவர் ஜேசுராஜ் திரவியம்,மூத்த இயக்குனர் ஜான் பிரிட்டோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,
புத்தூர் வட்டார சபை தலைவர் ராஜ்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்,கிளை சபை தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி,
வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் இயேசு பிறப்பின் மகிமை மற்றும் அவரின் போதனைகள் அவர் செய்த நற்காரியங்கள் அனைத்து போதனைகளும் மக்களுக்கு கூறப்பட்டது.
மேலும் இதில்
முதியோர்களுக்கு
புத்தாடைகள்,பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள்,மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள்,மற்றும் 300 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவுகளும் வழங்கப்பட்டு விழாவை சிறப்பித்தனர்.