தீபத்திருநாள் கொண்டாட்டம்

முதியோர் இல்லத்தில் மகிழ்வொளி தீப ஒளி திருநாள் விழா கொண்டாடப்பட்டது


திருச்சி,நவ,13:                                          கே.கே .நகரில் பல ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் அருவி முதியோர் இல்லத்தில் மகிழ்வொளி தீப ஒளி திருநாள் விழா கொண்டாடப்பட்டது,

இதில் அருவி முதியோர் இல்லாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு துணை காவல் ஆணையர் அன்பு, மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் இணைந்து முதியோர்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி திருநாளை கொண்டாடினார்,


மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பால்குணா, லோகநாதன், விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஆர். கே. ராஜா, தமிழக பண்பாட்டு கழக நிறுவனர் மற்றும் தலைவர் ஜாகிர் உசேன், கன்மலை அறக்கட்டளை எடிசன்,அக்னி சிறகுகள் தொண்டு நிறுவன இயக்குநர் மகேந்திரன், புதுவாழ்வு சமூகநல அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு குருதி  கொடையாளர் கூட்டமைப்பின் தலைவர் பிளட்ஷாம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,


நிகழ்வின் ஏற்பாடுகளை அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் சையத் தாஹா மற்றும் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் ஊழியர்கள்  செய்தனர.

Post a Comment

Previous Post Next Post

Contact Form