திருச்சி உக்கடை அரியமங்கலம் ரயில்வே பாதையை கடக்க முயன்றவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து விட்டார்
திருச்சி,நவ,24: திருச்சி உக்கடை அரியமங்கலம் ரயில்வே பாலம் அடியில் ஆண் ஒருவர் 23/11/2023 நேற்று மாலை 6.30. மணி அளவில் சுமார் 48 வயது மதிக்க கூடிய நீல கலர் முழுகை சட்டையும் கட்டம் போட்ட கைலியும் அணிந்து உள்ளதாகவும் இவர் ரயில்வே பாதையை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டார்,இவரின் முகம் அடிபட்டு சிதைந்து விட்டதால் இவரைப் பற்றிய முழு விவரம் தெரியவில்லை எனவே இதைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கும்படி ரயில்வே காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
