திருச்சி, நவ,21: கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக புதிதாக தார் சாலை அமைத்திட கோரியும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும், கழிவு நீர் வாய்க்காலை தூர்வாரி நடவடிக்கை எடுக்க கோரியும் , கொப்பம்பட்டி ஏரியில் மண் திருடி வருவதை தடுத்து நிறுத்திட கோரியும் குறிப்பாக கொப்பம்பட்டியில் விவசாயிகளுக்கு தொல்லை செய்து நில மோசடி செய்து வரும் ஊராட்சித் தலைவர் முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்ட செயலாளர் காசிம் தலைமை தாங்கினார்.லால்குடி ஒன்றிய செயலாளர் காமராஜ், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மலர்மன்னன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிரிஜா,தமிழ் புலிகள் கட்சி ராஜா மக்கள் உரிமை கூட்டணி மேற்கு மாவட்ட செயலாளர் அந்தோணி மற்றும் கணபதி செந்தில்குமார் சண்முகம்மணிகண்டம் ஒன்றிய செயலாளர் டேனி வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.