No title

  திருச்சி.நவ.26:                                           ஹஜ் உம்ரா பயணத்திற்கு சென்னையிலிருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் திருச்சியில் நடந்த ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்க பொது குழுவில் தீர்மானம்


தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடந்தது.

தமிழ்நாடு ஹஜ் உம்ரா தனியார் ஏற்பாட்டாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது சபியுல்லா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹஜ் , உம்ரா ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர் 

இதில் மாநில தலைவர் முகமது சபியுல்லா செய்தியாளர்களை சந்தித்து பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசினார்..

ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தை தமிழக அரசு சிறுபான்மை துறை அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும். 

உம்ரா புனித பயண ஏற்பாட்டாளர்களுக்கு தொழில் உரிமை சான்றிதழ் வழங்கி தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். 

போலி டிராவல்ஸ் நிறுவனங்களை கண்டு பொதுமக்கள் ஏமாற கூடாது என தெரிவித்தனர்.

போலி நிறுவனங்களை கண்டறிந்து முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தியாவில் பல பெரு நகரங்களில் இருந்து இயங்குவது போன்று சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவையை துவங்கிட வேண்டுமென்று ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களை இந்த சங்கத்தின் மூலம் வலியுறுத்த வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


ஹஜ் , உம்ரா புனித பயணத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட கட்டணங்களை விட அதிக கட்டணங்களை வசூலித்தால் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்ட சேவையை முறையாக வழங்காமல் இருக்கும் நிறுவனங்களை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தனர் 

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில செயலாளர் ஜுபேர் பொருளாளர் மக்கா கலீல் துணைத் தலைவர்கள் முகமது யூசுப் முகமது பாரூக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

முகமது சபியுல்லா,தலைவர்,தமிழ்நாடு ஹச் உம்ரா தனியார் ஏற்பாட்டளர்கள் சங்கம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form