திருச்சி: பாலக்கரை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக்:14: திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன் நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில், தெற்கு மாவட்ட தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.