திருச்சி, அக், 14: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும் முதல்வரும்மான முனைவர் ஜான் பிரிட்டோ நேன்று இயற்கை எய்தினார்.
(வயது 78) நேன்று மாலை மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, நேன்று மாலை 5.15 மணி அளவில் மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார் இந்தச் செய்தியை அறிந்ததும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் புனித சென் ஜோசப் கல்லூரிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருஉடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்
இயேசு சபையின் அருட் சகோதரர்களுக்கும் கல்லூரியின் பேராசிரியர் மாணவர்கள் ஆகியோருக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டார்
உடன் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் மோகன் ஆகியோர் இருந்தனர்