அரியமங்கலத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

 திருச்சி அரியமங்கலத்தில் வேன் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2500 ரூபாய் பணத்தைப் பறித்து சென்ற ரவுடி கைது


திருச்சி, அக்:14:                                       திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை தீப்பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி இவரது மகன் தெய்வ மணிகண்டன் வயது (41) இவர் சொந்தமாக டூரிஸ்ட் வேன் வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று காலை அரியமங்கலம் வடக்கு உக்கடை பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.  அப்போது தெய்வ மணிகண்டனை மர்ம நபர் ஒருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த 2500 ரூபாய் பணத்தை பறித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தெய்வ மணிகண்டன் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தெய்வமணிகண்டனிடம் பணத்தைப் பறித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்கிற கஞ்சா கணேசன் என்ற ரவுடியை போலீசார் கைது செய்து திருச்சி 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கஞ்சா கணேசன் மீது அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் அடிதடி ,செயின் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையிலும் மேலும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form