திருச்சி, செப், 9: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பிச்சாண்டார்கோயில் ராசா உயர்நிலைப் பள்ளியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி முதுகலை சமூக பணித்துறை இணைந்து குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் என்பவர் தாயின் கருவறை முதல் பதினெட்டு வயது பூர்த்தியாகும் வரை உள்ளவர்கள் ஆவார் குழந்தைகளுக்கான நான்கு வகையான உரிமைகள் குறித்தும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் கல்வியின் அவசியம் குறித்தும் ஒருங்கிணைந்த சேவை மைய வழக்குப் பணியாளர் மெகருநிஷா குழந்தை திருமண தடைச் சட்டம் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார். முதுகலை சமூக பணித்துறை மாணவி துர்காதேவி வரவேற்றார்.மாணவி சுபஸ்ரீ நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
.jpg)