புனித ஆரோக்கிய அன்னை திருவிழா

 திருச்சி, செப், 9:                                     திருச்சி வேளாங்கண்ணி என்றழைக்கப்படும், திருச்சி கொட்டப்பட்டு புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கவுன்சிலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினருமான எல் ரெக்ஸ்,


திருத்தேரினை இழுத்து சிறப்பு செய்தார்கள். நிகழ்வில் ஹைதராபாத் - தமிழ்நாடு மறைமாநில இறைவார்த்தை சபை தலைவர் அருள்பணி சாந்தராஜா, பங்குத்தந்தை அருள்பணி பால் ஜெயக்குமார், எஸ் வி டி சபை பொருளாளர் அருள்பணி ரொசாரியோ, புனித சார்லஸ் குருமட அதிபர் அருள்பணி லாரன்ஸ் போஸ், பங்குப்பேரவை செயலர் திரு லிங்போர்ட,  பங்குப்பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form