போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
தனியார் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்,
திருச்சி, செப், 9 : திருச்சியில் பல்வேறு பகுதியில் இயங்கி வரும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவும் செல்வதாகவும் தடை செய்யப்பட்ட பைக் ஹாரன் பயன்படுத்துவதாகவும்,சாலையின் நடுவே நிறுத்தி ஆட்களை ஏற்றுவதும் இறக்குவதும் போட்டி போட்டுக் கொண்டு
பயணிகளின் உயிரை பொறுப்பெடுத்தாமல் அதிவேகமாக செல்வதாலும் பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டி வந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு திருச்சி மேலப்புதூர் சிக்னல் அருகே மிக சத்தமாக ஹாரன் ஒலி எழுப்பி கொண்டு அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் வழி மறைத்தனர் , இதனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,
இதை அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் அதிவேகமாக வந்த பேருந்தையும் தடை செய்யப்பட்ட பைப் ஹாரனையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.