டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

 டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு வட்டார கல்வி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்


திருச்சி, செப்,21:                                     திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்குமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கருணாம்பாள். இவரது சிறந்த ஆசிரியர் பணிக்காக இவருக்கு செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கியது

விருது பெற்ற தலைமையாசிரியர் கருணாம்பாளை சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரெஜி பெஞ்சமின்,  ஜெஹ்ரா பர்வீன் மற்றும் சக தலைமையாசிரியர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form