திருச்சி, செப்.18: திருச்சி மாவட்டம் துறையூர் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜி தலைமை தாங்கினார்
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திருநங்கை லாவண்யா பள்ளி மாணவ மாணவிகளுக்கு தற்கொலை சம்மந்தமான தற்கொலை செய்து கொள்ள கூடாது என்றும் தற்கொலை தடுப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் படகாட்சிகளுடன் விளக்கி பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணன்,பானுமதி, ஜோதி, கோமதி ஆகிய அனைவரும் தற்கொலை தடுப்பு குறித்து பள்ளி மாணவர்களிடம் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் சார்பில் உதவி ஆசிரியர் புவனேஸ்வரி நன்றியுரை வழங்கினார்கள். தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஆல் தி சில்ரன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முருகையா ஏற்பாடு செய்திருந்தார்.