செல்பேசி விழிப்புணர்வு பிரச்சாரம் 28ஆம் தேதி தொடக்கம்
திருச்சி, ஆகஸ்ட், 24: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு இருந்து செல்போன்களால் ஏற்படும் விபத்து குறித்த தடுப்பு விழிப்புணர்வு எருமைமாடு தலையுடன் கூடிய செல்ஃபோன் உருவ பாக்ஸில் எமதர்மராஜா படத்துடன் நடைபயணம் வருகின்ற 28.ம் தேதி துவங்க உள்ளது,
இதில் திருச்சி மாநகர காவல் போக்குவரத்து கட்டுப்பாடு பிரிவு ஸ்ரீங்கம் மக்கள் நல சங்கம் . , தமிழ்குரல் அறக்கட்டளை சமயபுரம். ஒய்ட்ரோஸ் பொதுநல சங்கம். மற்றும் திருச்சி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள் சார்பில் மூத்த சமூக ஆர்வலர் சீனிவாசா பிரசாத், இந்த செல்போன் விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்க உள்ளார்,
பொது நல விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஸ்ரீரங்கத்தில் புறப்பட்டு திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் . பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள். பஸ் ஸ்டாப்புகள். பள்ளி மாணவ மணவியர்களுக்கும் பயன் தரும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம்.நடைபெற உள்ளதாக சமூக ஆர்வலர் தெரிவித்தார்,
செல்பேசி விழிப்புணர்வு பலகை மற்றும் எருமை மாடு தலை வடிவில் செல்பேசி பாக்ஸ் ஆகியவை வடிவமைத்து உள்ளார்,