ஐஸ்வர்யம் அகாடமியின் துவக்க விழா

 ஐஸ்வர்யம் அகாடமியின் 2ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது,


திருச்சி, ஆகஸ்ட், 29:                              திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே  டால்மியாபுரத்தில் உள்ள ஐஸ்வர்யம் அகாடமியின் 2ம் ஆண்டு துவக்கவிழா அதன் நிறுவனர் பிரபாகரன் கணேசன் தலைமையில் நடைபெற்றது,


இதில் சிறப்பு விருந்தினர்களாக    லால்குடி உட்கோட்டம் காவல் துணை ஆணையர்,அஜய் தங்கம்,

தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்கத்தலைவர்  ராகேஷ் என். சுப்ரமணியன், 


இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்நாடு குடியரசு தொழிற்சங்க மாநில துணைத்தலைவரும் முன்னாள் ராணுவ வீரருமான கிருஷ்ணமூர்த்தி,

தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்கம்.செயலாளர் பிரவீன் ஜான்சன்  

 லயன்ஸ் கிளப் டால்மியாபுரம். சாசன தலைவர் ஜான், 

லயன்ஸ் கிளப் தலைவர் அலெக்சாண்டர் சமூக நல பாதுகாப்பு நலிவுற்றோர் நல சங்கம்..சுந்தரி.எஸ் பி தர்சனா அகாடமி இயக்குனர் கோமதி சுப்ரமணியன் ஆகியோர்  கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசினையும் பாராடிணையும் வழங்கி அவர்களுக்கு ஊக்கம் அளித்தனர்.


மாணவர்கள் அனைவரும் தங்களின் தனி திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்தனர்..

ஐஸ்வர்யம் அகாடமி அனைத்து துறை வகுப்புகளிலும் சிறப்பாக பணியாற்றி தனித்துவம் பெற்று விளங்குகிறது என காவல்துறை துணை ஆணையர் பாராட்டினார்.                                             ஜான் (லயன்ஸ் சங்கத் தலைவர்)  ஓவிய உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற  மாணவர்களின் ஓவியத்தை   தேர்வு செய்து  சிறந்த ஓவியம் படைத்த  மாணவர் ராம்ஜிக்கு  ஒரு கிராம்  தங்க நாணயம்  பரிசாக  வழங்கி பாராட்டினார்.

மேலும் இந்திய குடியரசு கட்சி திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்நாடு குடியரசு தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் இந்த நிர்வணம் மேலும் மேலும் வளர்ந்து பல்வேறு கிளைகள் உருவாக்கி சிறந்து விளங்கிடவும் பல மாணவர்களை உருவாக்கிடவும் மனமாற வாழ்த்துகிறேன் என்றும் பரிசு பெற்ற மாணவ மாணவிகளையும் வாழ்த்தினார் 


இதில் ஐஸ்வர்யம் அகாடமியின் ஒருங்கிணைப்பாளர். ரேகா பிரபாகரன், மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form