அரியமங்கலத்தில் அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டது,
திருச்சி உக்கடை அரியமங்கலம் வடக்கு பகுதி மலையடிவரம் அருகே உள்ள அஞ்ஜுமனே ஹிமாயத்தோ இஸ்லாம் கட்டிடத்தில் \புதிதாக குழந்தைகளுக்கான அங்கன் வாடி மையம் துவக்க விழா, நடைபெற்றது,
திருச்சி, ஆகஸ்ட்,24: குழந்தை வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் செயல்படும் இந்த மையத்தில், சிறு குழந்தைகளுக்கான கல்வி கற்றல் விளையாட்டு பொருள்கள் கொண்டு எழிமையான முறையில் கல்வி கற்றுதருதல் குழந்தைகளை விளையாட்டில் ஆர்வமூட்டுதல்,
குழந்தைகளின் திறன் அறிந்து அதற்க்கான பயிற்சி அளித்தல் போன்ற எளிமையான முறையில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தரப்படும் என்று தெரிவித்தனர்,
இந்நிகழ்வில் நிர்வாகிகள்
காமில்அன்வர்,ஜியவுல்லா,ஷாகுல்அமீது,தாஜ்தீன்,பக்ரூதீன் மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்