நினைவுச்சின்னங்கள்

 திருச்சி மாவட்டத்தில் உள்ள தர்காக்கள்,இஸ்லாமிய நினைவு சின்னங்கள் குறித்த வரலாறு புத்தகம் வெளியிடப்படும்.


திருச்சி, ஆகஸ்,5:                                    தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் சார்பில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ளஜமாலுதீன் காஜா தர்காவலாகத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

மாநில இளைஞரணி செயலாளர் சௌபர் சாதிக் காதிரி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்,நிர்வாகிகள் ஹிலால்,அஷ்ரப் அலி,பஷீர்,அபுதாஹிர்,இஸ்மாயில், மற்றும் பலர் கலந்து கொண்டனர்,

இதில் இஸ்லாமியர்களின் வரலாறு தொடர்ந்து மறைக்கப்பட்டு வருவதாகவும் இஸ்லாமியர்களின் வரலாற்றை நினைவு கூறும் விதமாகவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய தர்காக்கள்மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் அது குறித்து வரலாறுகளை அறியவும் தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் சார்பில்குழு அமைக்கப்பட்டு திருச்சி மாவட்டத்தில் கிளியூர்,மணச்சநல்லூர்,கல்லணை,ஒடுகம் பட்டி,நத்தர்ஷா தரகா ,உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட தர்காக்களுக்கு நேரில் சென்று அதன் வரலாறு குறித்தும் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்துள்ளோம் 

மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தர்காக்கள் நினைவுச் சின்னங்கள் குறித்த வரலாற்றை புத்தகமாக குறுகிய காலத்தில் வெளியிட உள்ளதாகவும்,இஸ்லாமியர்களின் வரலாறு இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ளும் வண்ணமாக இது போன்ற பணிகளை செய்ய உள்ளதாகவும்,தமிழக தர்காக்கள் சுன்னத் ஜமாத் மாநில செயலாளர் இளைஞர் அணி,செளபர் சாதிக்காதிரி தெரிவித்தார்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form