மத்தியசிறையில் சிறைவாசிகளுக்கு சிறுநீரகம் விழிப்புணர்வு
திருச்சி.ஆகஸ்ட்.29: திருச்சி மத்தியசிறையில் சுமார் 1727 சிறைவாசிகள் உள்ளனர். அதில் சிறுநீரக கோளாறு சம்மந்தமான சந்தேகம் உள்ள 130 சிறைவாசிகளுக்கு சிறுநீரகம் சம்மந்தப்பட்ட மருத்துவ விழிப்புணர்வு முகாம் திருச்சி ஏ.பி.சி மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர்.ஜெய்சுரேஷ் என்பவரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல், தங்களை காத்துக்கொள்வது எப்படி என்பதும், சிறுநீரக கோளாறுகளுக்கு உரிய சிகிச்சை பெற்றிடும் பட்சத்தில் அதிலிருந்து உடலை பாதுகாத்து கொள்ள இயலும் என்பதை சிறப்பு மருத்துவ நிபுணர் விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் , சிறைக் கண்காணிப்பாளர்,ஆண்டாள்.சிறை மேலாளர் திருமுருகன் மற்றும் சிறை அலுவலர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.