நடிகை ரோகிணிபரிசு வழங்கினார்

 பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா திரைப்பட நடிகை ரோகிணி தங்கம் வெள்ளி நாணயங்களையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்


திருச்சி.ஆகஸ்ட்.29:                               டிசைன் ஓவியப் பள்ளியின் பதிமூன்றாம் வருடத்தை முன்னிட்டு திருச்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான  ஓவியப்போட்டி நடைபெற்றது. 

எல்கேஜி முதல் யுகேஜி பயிலும் மாணவர்களுக்கு  வண்ணம் தீட்டும் போட்டியும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை  மர வீடு தலைப்பிலும், நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை  பிடித்த விளையாட்டுகள் தலைப்பிலும்,ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை திருச்சியின் பெருமை தலைப்பிலும் ஓவிய போட்டி நடைபெற்றது. எல்கேஜி, யுகேஜி பிரிவில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி யுகேஜி மாணவி பூர்ணா ஸ்ரீ முதல் பரிசினையும் , ராஜாஜி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி எல்கேஜி மாணவி ரிஷிகா இரண்டாம் பரிசினையும் ஆல்ஃபா ஆரம்ப பள்ளி மாணவி தன்யா ஸ்ரீ மூன்றாம் பரிசினையும் பெற்றனர்

முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பிரிவில் கேந்திர வித்யாலயா பள்ளி முதலாம் வகுப்பு பயிலும் மாணவி பிரித்திகா முதல் பரிசினையும் ஸ்ரீவாகீச வித்யாஸ்ரமம் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி த்ருஷிகா இரண்டாம் பரிசினையும் பிவிஎம் குளோபல் பள்ளி மாணவி தீக்க்ஷிதா மூன்றாம் பரிசினையும் பெற்றனர். ஐந்தாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பிரிவில் மகாத்மா காந்தி பள்ளி மாணவர் சுகந்தன் முதல் பரிசினையும் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி மிருதுளா இரண்டாம் பரிசினையும் அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளி ஹாசினி ஸ்ரீ மூன்றாம் பரிசினையும் பெற்றனர்

 ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைபெற்ற ஓவிய போட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வ சக்தி முதல் பரிசினையும் ஆர் எஸ் கே மேல்நிலைப்பள்ளி மாணவி சரிக்கா இரண்டாம் பரிசினையும் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கௌசிகா மூன்றாம் பரிசினையும் பெற்றனர். ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பங்கேற்றமைக்கான சான்றிதழும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கம் வெள்ளி நாணயங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு என்ற அடிப்படையில்  திரைப்பட நடிகை ரோகிணி டிசைன் ஓவிய பள்ளி தாளாளர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் முன்னிலையில் பாராட்டு சான்றிதழையும் பதக்கங்களையும் வழங்கினார். 

கவிஞர் நந்தலாலா,திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கல்வி வளர்ச்சி குழு தலைவர் பொற்கொடி,திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி‌,துணைத் தலைவர்கள் நன்மாறன், வல்லநாடான் கணேசன்,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form