தமுமுக, மமக கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருச்சி, ஆகஸ்ட், 14: திருச்சி கிழக்கு மாவட்டம் பூக்கொல்லை கிளை, 18 வது வார்டு, பகுதியில் தமுமுக, மமக,ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கிளை தலைவர் பாரூக் பாஷா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா முன்னிலையிலும் பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றினார்கள்"
முதல் தீர்மானம்!நீண்ட நாள் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை வலியுறுத்தி தமுமுக நடத்தும் தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு பூக்கொல்லை கிளை, தமுமுக, மமக சார்பாக பெருந்திரளாக கலந்து கொள்வது .
2வது தீர்மானம்!நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவன் சின்னதுரை வீட்டுக்குள் புகுந்து சாதி வெறி கும்பல் அவரையும் அவரது தங்கையையும் கொடூரமாக வெட்டி சாய்த்த கொடுமை பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஜாதி கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவதோடு, இத்தகைய வன்கொடுமையை போர்க்கால நடவடிக்கை எடுத்து உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
3வது தீர்மானம்,18வது வார்டு, பூக்கொல்லை , அலங்கநாதபுரம், வீரமாநகரம், கிருஷ்ணாபுரம், ஆகிய தெருக்களில் பாதாள சாக்கடை வேலை மெத்தனமாக நடைபெறுகிறது. ஆதலால் நிறைய இடங்களில் பள்ளம், மேடு , மண் சரிவு என்று இருப்பதால் பொதுமக்களுக்கு நடந்து செல்லவோ, இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியவில்லை. விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. விரைவாக பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து தருமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு கிளை சார்பாக புகார் அளிக்க உள்ளோம்...