ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் டிப்ளமோ பயிற்சி பயிலும் மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா




திருச்சி, ஜூலை, 31:                              திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் SRC கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் டிப்ளமோ பயிற்சி  பயிலும் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி பட்டவர்த் ரோடு அன்னதானசத்திரத்தில்  நடைப்பெற்றது, 


 
நிகழ்ச்சிக்கு  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ,  மாணவிகளுக்கு  சான்றிதழ்கள்  வழங்கினார்,


இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மதிவாணன் ஓய்வுபெற்ற அரசு  மருத்துவ  அலுவலர்  கோகிலா  திமுக வட்ட செயலாளர்கள் சிந்தாமணி சங்கர், ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின்  தாளாளர் உஷாவெங்கடாசலம் செய்திருந்தார்,

 நிகழ்ச்சியில் மாணவ,  மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது நிகழ்ச்சியின் நிறைவாக கல்வி நிறுவனத்தின்  முதல்வர் சத்தியராஜ் நன்றியுரை கூறினார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form