திருச்சி, ஜூலை, 27: உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மாவட்டம் சத்திரம் பகுதி உட்பட்ட திருவானைக்காவல் பெரியார் நகர் பகுதியில் ஜூலை மாதம் கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் சுடர்வேந்தன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..
சத்திரம்பகுதி செயலாளர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார்.. மாநில.சுடர்வேந்தன் சிறப்புரை ஆற்றினார்..
மாவட்ட செயளாலர் முகம்மது யூசுப் மாவட்டத்தில் வளர்ச்சி பற்றிய சிறப்பு ஆலோசனைகள் வழங்கினார்.. மாவட்ட துணை செயலாளர் மோகனசுந்தரம் புதிய உறுப்பினர்களை வரவேற்றார்.2023ஆம்ஆண்டுக்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் வாகனத்திற்கு ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது.வரவு செலவு கணக்கு விபரம் உறுப்பினர்கள் பார்வைக்கு தாக்கல் செய்யப்பட்டது ..மாவட்ட செய்தி தொடர்பாளர்.யோகராஜ் நன்றியுரை ஆற்றினார்..
மண்டல செயலாளர் முரளிகிருஷ்ணன்,மாவட்ட துணை செயலாளர் முகம்மது சதாம் ஹூசைன் வயலூர் பகுதிசெயலாளர்லோகநாதன் , தென்னூர் பகுதி செயலாளர் முபாரக் அலி, வாளாடி பகுதி செயலாளர் ஸ்ரீராம் ,பொன்மலை பகுதி செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஏர்போர்ட் பகுதி செயலாளர் நோபல்ஜார்ஜ், காட்டூர் பகுதி செயலாளர் நவீன் அந்தோணிராஜ்,மணப்பாறை பகுதி செயலாளர் சுப்புராஜ்,மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பகுதிகளை விரிவுபடுத்துதல்.முறையாக ஆண்டு சந்தா செலுத்திய அனைவரையும் போஸ்டல் இன்சூரன்ஸ் மற்றும் அமைப்புசாரா நல வாரியத்தில் இணைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது