தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டம்

 பல்வேறு தொண்டு இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம்


திருச்ச, ஜூலை, 24:                           தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பானது தமிழகம் முழுவதும் உள்ள சமூக சேவை செய்ய கூடிய தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், அனைத்து NGO க்களுக்கும் (டிரஸ்ட் மற்றும் சங்கங்கள் உள்ளிட்ட) முறையான அனைத்து பயிற்சிகள் வழங்குதல், தொண்டு நிறுவனங்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தல் போன்ற நோக்கத்தோடு கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அசோக்குமார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை தமிழகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து பல்வேறு பயிற்சிகள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டமைப்பின் நிர்வாக வசதிக்காக தமிழகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர்.மேலும் மக்களின் நலனுக்காக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் நடந்த இந்த கருத்தரங்கு தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான திர

 அசோக்குமார்தலைமையிலும், கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் .பெருமாள் மற்றும் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

மேலும் இந்த கருத்தரங்கிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கு நிருவாக பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form